மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதியில் அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 186 சிறுவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. காரமடை அடுத்த கன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.காரமடை வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், 123 ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் முன், அரசு பள்ளி கல்வித்துறைக்கு வழங்கும், திட்டங்கள் குறித்து, பிளக்ஸ் வைக்கப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, மார்ச் முதல் தேதியிலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு முதல் வகுப்பில், தமிழ் வழியில், 723 சிறுவர்களும், ஆங்கில வழியில், 418 சிறுவர்களும் என மொத்தம் 1,141 சிறுவர்கள் சேர்ந்தனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் சேர்க்கை துவங்கியதால், கடந்தாண்டை விட இந்த ஆண்டு, கூடுதலாக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாளில், 186 சிறுவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பெற்றோர் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று, தங்கள் குழந்தைகளை பள்ளியில், முதல் வகுப்பில் சேர்க்கும் படி, விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
27-Dec-2025