உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி: ஊட்டி தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் பூங்கா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 'சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் தீர்மானித்த ஊதியத்தை வழங்க வேண்டும்,' என, உள்ளிட்ட தீர்மானத்தை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் மோகன் தலைமையில் ஏராளமான பூங்கா ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை