உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சம்பளம் வழங்காததால் பூங்கா தொழிலாளர்கள் அப்செட்

சம்பளம் வழங்காததால் பூங்கா தொழிலாளர்கள் அப்செட்

ஊட்டி,; தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி தோட்டக்கலை துறையின் கீழ், அரசு தாவரவியல் பூங்கா மற்றும் நஞ்சநாடு, தும்மனட்டி உள்ளிட்ட பூங்கா மற்றும் பண்ணைகளில், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றன. தொழிலாளர்களுக்கு மாதம் தோறும், 5ம் தேதிக்குள் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. நடப்பு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். 'அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும்,' என, தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில்,'' நிர்வாக காரணங்களால் வழங்க தாமதமானது. பரிசீலனை செய்து ஓரிரு நாளில் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ