நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தம்: பாதசாரிகள் பாதிப்பு
பந்தலுார் : பந்தலுார் பஜார் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதால், பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பந்தலுார் பஜார் பகுதி சாலை மிகவும் குறுகலான சாலையாக உள்ளது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பலரும் கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வருவதுடன், தற்காலிக கடைகளும் செயல்பட்டு வருகிறது.மேலும், பஜார் பகுதிக்கு பல்வேறு பணிகளுக்கு வரும் மக்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாத நிலையில், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.இதனால், அடிக்கடி போக்குவரத்து பிரச்னை ஏற்பட்டு வருவதுடன், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வாகனங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் நபர்கள், ஒரு நாள் முழுவதும் சாலை ஓரங்கள் மற்றும் நடைபாதைகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.ஏற்கனவே, இது குறித்த புகார் வந்ததையடுத்து, 'போலீசார் இது போன்ற வாகனங்களை பஜார் பகுதியில் நிறுத்த கூடாது,' என, எச்சரித்தனர்.ஆனால், மீண்டும் சாலை ஓரங்கள் மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வதால், போக்குவரத்தில் பிரச்னை ஏற்படுவதுடன் பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.போலீசாரும் இது குறித்து கண்டு கொள்வதில்லை. எனவே, பந்தலுார்பஜாரில் போக்குவரத்துபிரச்னைக்கு தீர்வு காண,போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும்.