வாகனம் நிறுத்துவதில் சிக்கல் சீரமைப்பு பணிஅவசியம்
கோத்தகிரி, ; கட்டபெட்டு 'இன்கோ' சந்திப்பில் இருந்தது, குன்னுார் பஸ் நிறுத்தம் இடையே, சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 'கான்கிரீட்' தளம் அமைக்கப்படாமல் உள்ளது. சாலையில், போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்கு டாஸ்மாக் மதுபான கடையும் அமைந்துள்ளது. மது வாங்குவோர், சாலையில் வாகனங்களை நிறுத்தி கடைக்கு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மது பிரியர்களால், போதையில் சாலையில் நடந்து செல்லும் போதும், விபத்து அபாயமும் உள்ளது. சாலை ஓரத்தில் விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் குழிகளை மூடி சமன் செய்து, தளம் அமைத்தால் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.