மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்: சென்னை
11-Sep-2026
பாலக்காடு: பாலக்காடு மேப்பரம்பு மசூதிக்கு பின்பக்கம் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் திட்டமிட்டு பதுங்கியிருந்த கும்பல், கடந்த ஜூன் 19ம் தேதி நள்ளிரவு, அவ்வழியாக பைக்கில் பயணித்த மேப்பரம்பு பகுதியை சேர்ந்த சுனில்குமார் என்பவரை தடுத்து நிறுத்தி, சரமாரியாக தாக்கியதோடு அவரிடமிருந்த, 3,500 ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். புகாரின்பேரில், பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் அப்சல், நசீர் ஆகிய இருவரை கைது செய்தனர். இவ்வழக்கில், தொடர்புடைய மேப்பரம்பு பேழுங்கரையைச் சேர்ந்த அப்பாஸ், 42, தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், எஸ்.ஐ., அஜசுத்தீன் தலைமையிலான போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
11-Sep-2026