உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழுதடைந்த அரசு பஸ்கள் பயணம் செய்ய பயணிகள் அச்சம்

பழுதடைந்த அரசு பஸ்கள் பயணம் செய்ய பயணிகள் அச்சம்

குன்னுார், : குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் பழுதடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருகிறது.குன்னுார் -- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலும் பழமை வாய்ந்ததாக உள்ளது. தற்போது, ஓரிரு பஸ்கள் புதிய பஸ்கள் இயக்கப்பட்ட போதும், பெரும்பாலான பழைய பஸ்களின் கூரைகள், ஜன்னல், உடைந்த நிலையில் இருப்பதால் மழை நீர் உள்ளே புகுந்து மக்கள் அமர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, ஜன்னல் பக்கவாட்டு தடுப்பு உடைந்து தொங்கியபடி இயக்கப்படுகிறது. இதனால், பயணிகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை