உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி பஸ் ஸ்டாண்டில் திரண்ட பயணியர்

ஊட்டி பஸ் ஸ்டாண்டில் திரண்ட பயணியர்

ஊட்டி: தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்ல, ஊட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் திரண்டனர். வெளியூரில் வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர், உறவினர்கள் என, பலரும் தீபாவளி பண்டிகை கொண்டாட, ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஊருக்கு வந்தனர். பண்டிகை முடிந்ததால், வெளியூர் செல்ல ஊட்டி பஸ் ஸ்டாண்டில் திரண்டனர். அதில், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல காலை முதல் கணிசமான கூட்டம் வந்த நிலையில், மதியம், 3:00 மணிக்கு மேல் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்தது. போக்குவரத்து அதிகாரிகள், பயணிகள் சிரமமின்றி செல்ல ஒலி பெருக்கி வாயிலாக அறிவிப்பு கொடுக்கு வரிசையில் நிற்க வைத்து அனுப்பி வைத்தனர். பொது மேலாளர் ஜெய்சங்கர் கூறுகையில்,‘‘பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, 20க்கு மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு, கோவை மற்றும் பிற இடங்களுக்கு பயணிகள் அனுப்பப்பட்டனர்,’’என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !