மேலும் செய்திகள்
அரசு பஸ் டயர் பஞ்சர் பயணிகள் தவிப்பு
01-May-2025
கூடலுார்,; அத்தி குன்னாவிலிருந்து கூடலுார் நோக்கி வந்த அரசு பஸ், இரும்புபாலம் அருகே, பழுதாகி நின்றதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.கூடலுார் பகுதியில் இயக்கப்படும் பல அரசு பஸ்கள் பழுதாகியும், டயர் பஞ்சர் ஆகி நடுவழியில் நிற்பது அடிக்கடி நடப்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், பந்தலுார் அத்திக்குன்னா பகுதியில் இருந்து, கூடலுார் செல்லும் அரசு பஸ் நேற்று மதியம், 12:15 மணிக்கு நாடுகாணியை கடந்து கூடலுார் நோக்கி வந்தது.பஸ்சில், 83 பயணிகள் பயணம் செய்தனர். இரும்புபாலம் அருகே, பஸ் பழுதாகி சாலையில் நின்றது. அதில், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.பஸ்சிலிருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். தொடர்ந்து, பஸ் ஊழியர்கள் அவ்வழியாக கூடலுார் சென்ற அரசு பஸ்களில், பயணிகளை ஏற்றி கூடலுார் அனுப்பி வைத்தனர்.போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி, ஊழியர்கள் பஸ்சை கூடலுாருக்கு எடுத்து வந்தனர்.பயணிகள் கூறுகையில், 'கூடலுாரில் இயக்கப்படும் பல பஸ்கள், நிறம் மட்டுமே மாறி உள்ளன. அவை பழைய பஸ்களாக உள்ளதால், அடிக்கடி பழுதாகியும், பஞ்சர் ஆகியும் சாலையில் நிற்பது தவிர்க்க முடியவில்லை. இது போன்ற சூழலை தவிர்க்க, இப்பகுதிக்கு புதிய பஸ்கள் வழங்குவதுடன், பழுதை சீரமைக்க, தேவையான உதிரி பாகங்களை வழங்க வேண்டும்,' என்றனர்.
01-May-2025