மேலும் செய்திகள்
உரிய நேரத்திற்கு வராத பஸ்களால் மக்கள் அவதி
16-Feb-2026
கோத்தகிரி: கோத்தகிரி-குன்னுார் இடையே, குறித்த நேரத்தில் பஸ் இயக்காததால், பயணிகள் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கோத்தகிரி-குன்னுார் வழித்தடத்தில், ஏராளமான குக்கிராமங்கள் அமைந்துள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், அரசு பஸ்களை நம்பி வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். இவ்வழித்தடத்தில், 20க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. கடந்த காலங்களில், சரியான நேரத்தில் இயக்கப்பட்ட பஸ்கள், தற்போது காலம் கடந்து இயக்கப்படுகின்றன. தவிர, ஒரே நேரத்தில், இரண்டு அல்லது மூன்று பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, அலுவலகம் செல்பவர்கள், தொழிலாளர்கள் மாலை நேரத்தில் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து நிர்வாகம் குறித்த நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
16-Feb-2026