உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கான்ட்ராக்ட் முறையை கைவிட ஓய்வூதியர்கள் கோரிக்கை

கான்ட்ராக்ட் முறையை கைவிட ஓய்வூதியர்கள் கோரிக்கை

கோத்தகிரி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பேரவை கூட்டம் கோத்தகிரியில் நடந்தது. பேரவை துணைத் தலைவர் சுந்தர்ராஜ், நிர்வாகி குருமூர்த்தி தலைமை வகித்தார். கிருஷ்ணன் ஆண்டறிக்கையும், மகாலிங்கம் வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனர். மண்டல துணை பொது செயலாளர் கருப்புசாமி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் தற்போதைய நிலை குறித்து பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு தீர்மான விபரம்: கடந்த, 2021 தேர்தல் வாக்குறுதியில், 100 நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என, அறிவித்த நிலையில், தற்போது வரை நடவடிக்கை இல்லை. மாநில அரசு போக்குவரத்து கழகத்தில், கான்ட்ராக்ட் முறையில் ஊழியர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். மின்சாதன பஸ்கள், தனியார் மினி பஸ்கள் இயக்குவதை தடை செய்ய வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஆண்டிலேயே, தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை வழங்க வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவதுடன், 2003ம் ஆண்டுக்குப் பிறகு, பணியில் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். பேரவை உறுப்பினர் கருணாமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி