உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தெருவிளக்குகள் எரியாததால் இருளில் செல்ல மக்கள் அச்சம்

தெருவிளக்குகள் எரியாததால் இருளில் செல்ல மக்கள் அச்சம்

கோத்தகிரி: கோத்தகிரி ராம்சந்த் பழைய நுாலகம்-- காளவாய் இடையே, ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரியாததால், இருளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோத்தகிரி ராம்சந்த் சுற்றுப்புற பகுதிகளியில், நுாற்றுக்கணக்கான குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள நடைபாதையில், ஒரு வாரத்திற்கு மேலாக, தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால், இருள் சூழ்ந்த நடைப்பாதையில் அச்சத்திற்கு இடையே, மக்கள் நடந்து சென்று வருகின்றனர். இப்பகுதியில், புதர் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், கரடி, சிறுத்தை மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இப்பகுதியில் உள்ள குடியிருப்பு மொட்டை மாடியில் கரடிகள் நடமாடியதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இந்நிலையில், தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வன விலங்குகளால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை