உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 100 அடி உயரத்தில் இருந்து உருண்ட பாறை வீட்டின் சுவர் இடிந்ததால் மக்கள் அச்சம் வீட்டின் சுவர் இடிந்து பாதிப்பு

100 அடி உயரத்தில் இருந்து உருண்ட பாறை வீட்டின் சுவர் இடிந்ததால் மக்கள் அச்சம் வீட்டின் சுவர் இடிந்து பாதிப்பு

குன்னூர்: குன்னூர் ஆப்பிள் பீ பகுதியில் ராட்சத பாறை விழுந்த இடத்தில், மீண்டும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் பாறைகள் உருண்டு வருகிறது. 'ஆப்பிள் பி ' அருகே ஜாய்ஸ் வளாக குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 100 அடி உயரத்தில் இருந்த ராட்சத பாறை உருண்டு வந்து விழுந்தது. இதில் பிரவின் என்பவரின் வீட்டின் பின்பகுதி சுவர் இடிந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விழுந்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. தகவலின் பேரில் நேற்று தாசில்தார் ஜவகர் தலைமையில், வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். மலை உச்சியில் திருவாங்கூர் பகுதியில் உள்ள சில பாறை கற்கள் உருண்டு கீழே வந்து விழும் அபாயமும் உள்ளதால், விழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் வருவாய் துறையினரிடம் வலியுறுத்தினர். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். விழுந்த பாறையை சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரே அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !