உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதடைந்த நடைபாதை தடுக்கி விழும் மக்கள்

சேதடைந்த நடைபாதை தடுக்கி விழும் மக்கள்

கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னோரை கிராம நடைபாதை சேதம் அடைந்துள்ளதால் மக்கள் நடமாடுவதில் சிரமம் ஏற்படுகிறது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னோரை கிராமத்தில், 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம பொது இடத்தில், சமுதாய கூடம், கோவில் அமைந்துள்ளது. இங்கு திருமணம், சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவிலுக்கு சென்று வரும் நடைபாதை சேதம் அடைந்துள்ளது. படிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பக்தர்கள், தேயிலை தோட்டத்திற்கு சென்று வரும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும், விளை பொருட்களை செங்குத்தான நடைபாதையில் எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நடுஹட்டி ஊராட்சி நிர்வாகம் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !