உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆதார் மையம் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி

ஆதார் மையம் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி

அன்னுார் : அன்னுாரில் மேலும் ஒரு ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அரசின் அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்தல், வங்கி சேவை, என எதுவாக இருந்தாலும், ஆதார் கட்டாயத் தேவையாக உள்ளது. ஆதார் கார்டில் பிறந்த தேதி, முகவரி மாற்றம் செய்தல் என பல்வேறு பணிகளுக்கு அன்னுார் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு மக்கள் வந்து சேவைகளை பெற்று செல்கின்றனர். குறிப்பிட்ட சில சேவைகள் மட்டும் இ-சேவை மையங்களிலும், தபால் அலுவலகத்திலும் வழங்கப்படுகிறது.அன்னுார் தாலுகாவில், மூன்று பேரூராட்சி, 28 ஊராட்சிகள் உள்ளன. இதனால் அன்னுார் தாலுகா அலுவலகத்தில், ஆதார் மையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பிட்ட அளவு டோக்கன் மட்டுமே தரப்படுவதால், தாமதமாக வருவோர் மறுநாளும் வந்து ஆதார் சேவை பெற வேண்டி உள்ளது.இந்நிலையில் அன்னுாரில் கோவை ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கூடுதலாக ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. 'இத்துடன் கோவில்பாளையத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அல்லது பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் மையம் அமைக்கப்பட்டால், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள இரு பேரூராட்சிகள் மற்றும் ஏழு ஊராட்சி மக்களுக்கு உபயோகமாக இருக்கும்,' என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ