உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகற்றப்படாத குப்பை அம்பிகாபுரம் மக்கள் அதிருப்தி

அகற்றப்படாத குப்பை அம்பிகாபுரம் மக்கள் அதிருப்தி

குன்னுார்,; குன்னுார் அம்பிகாபுரம் அருகே, சாலையில் கொட்டப்பட்ட குப்பை அகற்றாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பிகாபுரம் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலையோரத்தில் காணப்படும் குப்பை அகற்றப்படாமல் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசி, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.கொசு, ஈக்கள் அதிகளவில் உள்ளதால், இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பஞ்., நிர்வாகத்திற்கு தெரிவித்தும் குப்பைகள் அகற்றப்படவில்லை.எனவே, மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் முன், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !