மேலும் செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வாகனம் வீண்
05-Dec-2024
குன்னுார்; குன்னுார் பாரதியார் மண்டபத்துக்கு தீயணைப்பு நிலையத்தை மாற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சி கடைகளை இடித்து கட்டுவதற்கு, 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. வியாபாரிகளுக்கு, தற்காலிக கடைகள் அமைக்க நான்கு இடங்களை நகராட்சி தேர்வு செய்திருந்தது. இதில், தீயணைப்பு துறை உள்ள இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து, தீயணைப்பு துறையை பாரதியார் மண்டபத்திற்கு மாற்ற நகராட்சி பரிந்துரைத்தது. இந்நிலையில், பள்ளிகள், தேவாலய பகுதிகளுக்கு அருகே குறுகலான சாலையில் உள்ள பாரதியார் மண்டபத்திற்கு மாற்றினால், தீ விபத்து நேரங்களில் உடனடியாக செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும், வருவாய் துறையினருடன் சேர்ந்து, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் என்ற பெயரில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மீண்டும் தீயணைப்பு நிலையத்தை இடமாற்ற பரிந்துரைத்தனர். இந்நிலையில்,குன்னுாரில், நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: குன்னுாரில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமான வாகன நிறுத்துமிடம், அணி வகுப்பு மைதானம், அலுவலகங்கள் உள்ள, 2 ஏக்கர் பரப்பளவிலான, இடத்திற்கு சொத்து வரி கட்டப்பட்டு, தற்போது முறையாக இயங்கி வருகிறது. இந்த நிலையத்தை பாரதியார் மண்டபத்திற்கு மாற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தீ விபத்து ஏற்படும் போது, பள்ளி குழந்தைகள் சென்று வரும் குறுகிய மேடான சாலையில், உடனடியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால், அந்த இடத்திற்கு தீயணைப்பு நிலையம் மாற்ற முடியாது. இங்குள்ள தீயணைப்பு துறையை காலி செய்து, வேறு இடத்திற்கு மாற்றவும் ஐகோர்ட் தடை விதித்த ஆற்றோர பகுதியையும் சேர்த்து நகராட்சி கடைகள் அமைக்க நகராட்சி தீவிரம் காட்டுகிறது. பிருந்தாவனம் பகுதியில் தீயணைப்பு நிலையம் கட்ட அரசு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த இடத்திற்கு தீயணைப்பு நிலையம் மாற்றப்பட்டாலும், தற்போதுள்ள இந்த இடம் தீயணைப்பு துறையின் மாற்று பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
05-Dec-2024