உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸ் சோதனைக்கு பின் அனுமதி

அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸ் சோதனைக்கு பின் அனுமதி

ஊட்டி: மனு அளிக்க வருபவர்களால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், ஊட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தீவிர சோதனைக்கு பின், அனுமதி வழங்கி வருகின்றனர். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை குறை தீர்ப்பு கூட்டம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பதால் பொதுமக்கள் மனு அளிக்க அதிகளவில் வருகின்றனர். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டு கணக்கில் தீர்க்கப்படாத பிரச்னை குறித்தான கோரிக்கையை சம்மந்தப்பட்ட நபர்கள், கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க வருகின்றனர். சம்மந்தப்பட்ட துறைக்கு மனு அளித்து, தீர்வு கிடைக்காமல் அதிருப்தி அடைந்தவர்கள் சிலர் தீக்குளிப்பு முயற்சி, முற்றுகை, தர்ணா மற்றும் நுாதன போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதை தடுக்கும் விதமாக, மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், மனு அளிக்க வரும் பொதுமக்கள், நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தி சோதனையிடுகின்றனர். குறிப்பாக, பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவைகளை பையில் மறைத்து வைத்து எடுத்து வந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், தீவிர சோதனைக்கு பின், மனு அளிக்க போலீசார் அனுமதிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை