உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவித்தொகை கேட்டு மனு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவித்தொகை கேட்டு மனு

கூடலுார்; நடுவட்டத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், பட்டா, முதியோர் மற்றும் மகளிர் உதவி தொகை கேட்டு அதிகளவில் மனுக்கள் அளித்தனர். நடுவட்டம், பேரூராட்சி சார்பில், நடுவட்டம் சமுதாய கூடத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் கங்காதரன் வரவேற்றார். முகாமுக்கு பேரூராட்சி தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேசன் துவக்கி வைத்தார். முகாமில் திரளான மக்கள் பங்கேற்று மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடமிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில், பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை கேட்டு அதிக மனுக்கள் வந்திருந்தது. முகாமில், நடுவட்டம் பேரூராட்சி துணை தலைவர் துளசி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி தலைமை எழுத்தாளர் அரசு நன்றி கூறினார். இதே போல கூடலுார், பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை