உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் மனு

கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி; அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக் கோரி, கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஊட்டி கணபதி நகர் மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டு கணபதி நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம். நடைபாதை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி, ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர தாங்கள் ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி