உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் குவியல்

ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் குவியல்

ஊட்டி; ஊட்டி சேரிங்கிராஸ் அருகே 'பார்க்கிங்' பகுதியில் குவியலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மறு சுழற்சி செய்ய முடியாத, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு, தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் வகையில் சோதனை சாவடிகளில் சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், பிற மாநிலம், வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மறைத்து கொண்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினாலும் பிளாஸ்டிக் புழக்கம் உள்ளது. கடந்த வாரத்தில், ஊட்டி அருகே பகல்கோடு மந்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மூட்டைகளாக சேகரிக்கப்பட்டதை கண்ட சூழல் அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஊட்டி மையப்பகுதியான சேரிங்கிராஸ் பார்க்கிங் பகுதியில், குவியலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் குவிந்து காணப்படுகிறது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் கள ஆய்வை தீவிரப்படுத்தி, எல்லையில் பிளாஸ்டிக் சோதனை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி