உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாதனையாளர் பட்டியலில் இடம்; இரண்டு வயது குழந்தைக்கு பாராட்டு

சாதனையாளர் பட்டியலில் இடம்; இரண்டு வயது குழந்தைக்கு பாராட்டு

பந்தலுார் : பந்தலுார் பகுதியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை உலக சாதனையாளர் பட்டியல் புத்தகத்தில் இடம் பிடித்தது.பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்தவர்கள் சங்கீதா-பிரதீப் தம்பதி. இவர்களின் இரண்டு வயது குழந்தை ரக்ஷித்ரிஹான்,2. இந்த குழந்தை இரண்டு வயது துவக்கம் முதலே மரக்கன்று நடுவதில் ஆர்வம் காட்டி வந்ததால், தாய் சங்கீதா மரக்கன்றுகளை வாங்கி வந்து கொடுத்து வருகிறார்.இவரது திறமை குறித்து, 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியானது. தொடர்ந்து, உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. இவர் மொத்தம், 125 மரக்கன்றுகளை நடவு செய்துள்ள நிலையில், டில்லியில் கடந்த, 3-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், மரம் வளர்க்கும் குழந்தைகளுக்கான, உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றார். தொடர்ந்து விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. குழந்தைக்கு, நீலகிரி கலெக்டர் லட்சுமிபவ்யா பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ