உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அதிகரிக்கும் ‘பிளாஸ்டிக்’ -அதிகாரிகள் மவுனம்

அதிகரிக்கும் ‘பிளாஸ்டிக்’ -அதிகாரிகள் மவுனம்

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் உப்பட்டி பகுதிகளில், தடை செய்யப்பட்ட ‘பிளாஸ்டிக்’ அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், டம்ளர்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேரம்பாடி, கொளப்பள்ளி, உப்பட்டி பகுதிகளில், இதன் விற்பனை அதிகரித்த போதும் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். கேரளா மாநிலத்திலிருந்து அதிக அளவில் கொண்டு வந்து, சாதாரணமாக விற்பனை செய்யப்படும் நிலையில், சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஒரே நாளில் கூடுதலான பணியாளர்களை அமர்த்தி, ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்