உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாக்காளர் கணக்கீட்டுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் : படிவங்கள் வழங்கி ஆர்.டி.ஓ. அறிவுரை

வாக்காளர் கணக்கீட்டுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் : படிவங்கள் வழங்கி ஆர்.டி.ஓ. அறிவுரை

பந்தலூர்: வாக்காளர் கணக்கீட்டு படிவ சிறப்பு திருத்த பட்டியலில், முழுமையான தகவல்களை கொடுத்து வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டும். என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தலூர் அருகே சேரங்கோடு, சமுதாயக்கூடத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில், வி.ஏ.ஓ. ஷீஜா வரவேற்றார். கூடலூர் ஆர்.டி.ஓ. குணசேகரன் தலைமை வகித்து பேசுகையில், 'சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில், வாக்காளராக உள்ளவரின் பெயர் விடுபடாமல் இருக்கவும், வாக்காளர் அல்லாதவர் பெயர் இடம் பெறாமல் இருக்கவும் இந்த படிவம் வழங்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதற்காக அந்தந்த தேர்தல் நிலை அலுவலர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டு உள்ளதுடன், வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில் தெரிவித்து முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்களின் முழுமையான விவரங்களை முறையாக தெரிவித்து வாக்காளர் பட்டியலை தயார் செய்ய ஒத்துழைக்க வேண்டும்.'' என்றார் தாசில்தார் சிராஜூநிஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் விளக்கம் அளித்ததுடன், வாக்காளர்களுக்கு படிவத்தை வழங்கினார்கள். நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷைனி மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் ஷோனிஷாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ