உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் போக்குவரத்து நெரிசலால் போலீசார் திணறல்

ஊட்டியில் போக்குவரத்து நெரிசலால் போலீசார் திணறல்

ஊட்டி; ஊட்டியில் கோடை சீசன் துவங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இ- பாஸ் நடைமுறை ஜூன், 30ம் தேதி வரை இருப்பதால், வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி,6,000, வார நாட்களில், 8,000 வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் இ--பாஸ் சோதனைக்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.இதற்கிடையே, மே 1ம் தேதியிலிருந்து ஒரு வழிப்பாதை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் குஞ்சப்பனை வழியாகவும்; மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்கள் பர்லியார் வழியாகவும் ஊட்டிக்கு வர வேண்டும். ஆனால், போலீஸ் பற்றாக்குறை காரணமாக ஒரு வழிப்பாதை நடைமுறையை கடைப்பிடிக்க முடியாததால் வாகனங்கள் இருவழிப் பாதையில் சென்று வருகின்றன.ஊட்டியில் முக்கிய சந்திப்புகளான, 'சேரிங்கிராஸ், மதுவான சந்திப்பு, குன்னுார் சந்திப்பு, பிங்கர் போஸ்ட் சாலை,'என, நகரில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா வாகனம், உள்ளூர் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.போலீசார் கூறுகையில்,'கோடை சீசனின் போது குறைந்தது, 250 போலீசார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் இருப்பது வழக்கம். தற்போது, 50 போலீசார் மட்டுமே இப்பணியில் உள்ளனர். கடும் பணி சுமையில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கூடுதல் போலீசார் வந்தால் மட்டுமே போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி