போலீஸ் வாகனங்கள் ஏலம்: 30 ம் தேதிக்குள் பார்வையிடலாம்
ஊட்டி: நீலகிரி மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 6 ஆறு சக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 17 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வரும் நவ., 1-ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஊட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 31-ம் தேதி மாலை, 5:00 மணி வரை வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 31-ம் தேதியன்றே இருசக்கர வாகனத்திற்கு 1000 ரூபாய், நான்கு சக்கர வாகனத்திற்கு, 2000 ரூபாய் மற்றும் ஆறு சக்கர வாகனத்திற்கு. 3000 ரூபாய் முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி.,) இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் மற்றும் ஆறு சக்கர வாகனங்களுக்கு, 18 சதவீதம் முழுவதையும் அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு 94861 88599, 70107 01635 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.