சாலையில் உலா வரும் யானைகள் முன்னெச்சரிக்கை அவசியம்
குன்னுார், ;'குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், இரவில் உலா வரும் காட்டு யானைகளால் வாகனங்களை, முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில், 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், நள்ளிரவில் குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் சாலையில் உலா வருகின்றன.பகல் நேரங்களில் வனப்பகுதிகளில் இருக்கும் யானைகள், மாலை மற்றும் இரவில் சாலைகளில் உலா வருவதால் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், முன்னெச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,' மலை பாதையில் நள்ளிரவில் யானைகள் அதிகளவில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அவற்றின் முன்பு வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்ய கூடாது. யானைகள் சாலைகளில் இருந்தால், வாகனங்களை நிறுத்தி யானை வனப்பகுதிக்குள் சென்ற பின்பு வாகனங்களை இயக்க வேண்டும்,' என்றனர்.