வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கே வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் வாங்க. ஆனா, அஞ்சடுக்கு பாதுகாப்பு , புண்ணாக்குந்னு மக்களை அடிச்சு முடக்காதீங்க. நேத்திக்கிதான் சாமானியர்களை பாதுகாக்கும் அசியலமைப்பு சட்டம்னு பேசினீங்க.
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு, நாளை (28ம் தேதி) ஜனாதிபதி வருகை தருவதையொட்டி, கோவை மண்டல ஐ.ஜி., தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நம்நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இந்த கல்லுாரியில், 28ம் தேதி முப்படை பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இன்று ஊட்டிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பதுடன், போர் நினைவு சதுக்கத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.இந்நிலையில், ஊட்டியில் இருந்து கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வந்த, பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ பேண்ட் இசைக்க, மலர் வளையம் வைப்பது; குதிரை அணிவகுப்புடன் ராணுவ மரியாதையுடன் ஜனாதிபதியை அழைத்து செல்வது உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தது.ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், கோவை மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்றனர்.
எங்கே வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் வாங்க. ஆனா, அஞ்சடுக்கு பாதுகாப்பு , புண்ணாக்குந்னு மக்களை அடிச்சு முடக்காதீங்க. நேத்திக்கிதான் சாமானியர்களை பாதுகாக்கும் அசியலமைப்பு சட்டம்னு பேசினீங்க.