உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினர் கிராமத்தில் பிரதமர் பிறந்த நாள் கொண்டாட்டம்

பழங்குடியினர் கிராமத்தில் பிரதமர் பிறந்த நாள் கொண்டாட்டம்

கூடலுார்; கூடலுார் ஸ்ரீமதுரை பழங்குடி கிராமத்தில் பிரதமரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கூடலுார் ஸ்ரீமதுரை ஓடக்கொல்லி பழங்குடி கிராமத்தில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு. ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவர் சுனில் தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் அருண், 'மத்திய அரசு பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள்,' குறித்து விளக்கினார். தொடர்ந்து, பழங்குடியினருக்கு இனிப்பு வழங்கி பிரதமர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், கூடலுார் வடக்கு மண்டல துணை தலைவர் கிருஷ்ணா, மனோஜ் குமார்,ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சிவக்குமார், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜகோபால், சுனில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புத்துார்வயல் மகாவிஷ்ணு கோவிலில், பா.ஜ., சார்பில் பிரதமர் பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !