உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; தகுதியானவர்கள் பங்கேற்கலாம்

ஊட்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; தகுதியானவர்கள் பங்கேற்கலாம்

ஊட்டி; 'தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தகுதியானவர்கள் பங்கேற்கலாம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளி கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 20ம் தேதி ஊட்டி கூடுதல் கலெக்டர் வளாகத்தில் நடக்கிறது. முகாமில், பல்வேறு காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.முகாமில், '8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி; பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள்,' என, அனைத்து விதமான தகுதியாளர்களும் பங்கேற்கலாம். முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்த படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், விபரங்களுக்கு, 0423--2444004, 72000 19666 எண்களில் தொடர்பு கொள்ளலாம் . இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ