உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை நடுவே நிறுத்தப்படும் அரசு பஸ்கள்; தனியார் வாகன டிரைவர்கள் அதிருப்தி

சாலை நடுவே நிறுத்தப்படும் அரசு பஸ்கள்; தனியார் வாகன டிரைவர்கள் அதிருப்தி

கூடலுர்; கூடலுார்- ஊட்டி சாலை, கோழிக்கோடு சாலையில், பயணிகள் ஏறி, இறங்க அரசு பஸ் சாலை நடுவே நிறுத்தப்படுவதால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலூரிலிருந்து, ஊட்டி மற்றும் சமவெளிப் பகுதிகளுக்கும், பந்தலுார் தாலுகா, கேரளா, கார்நாடக பகுதிகளுக்கு இடையே, அரசு பஸ்கள் வருகின்றனர். இதில், பந்தலுார் மற்றும் கேரளாவில் இருந்து கூடலூர் வரும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கோழிக்கோடு சாலை; ஊட்டி மற்றும் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும், அரசு பஸ்கள் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விநாயகர் கோவில் எதிரே, நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இந்த பஸ்கள் நிறுத்த சாலையோரம் தனியிடம் ஒதுக்கப்படாததால், பஸ்கள் சாலை நடுவே நிறுத்தி, பயணிகளை இறக்கி செல்வதால், ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுக்கு தீர்வாக, பஸ்கள், நிறுத்தி பயணிகளை இறக்கி செல்ல, சாலையோரம் தனியிடம் ஒதுக்க வலியுறுத்தி உள்ளனர். டி ரைவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில், போக்குவரத்து இடையூறின்றி, பஸ் நிறுத்தி பயணிகள் இறங்கி, ஏற வசதியாக ஏற்கனவே தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த இடங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பஸ்கள் சாலை நடுவே நிறுத்தி பயணிகளை இறக்கி செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, இப்பகுதிகளில் பஸ் நிறுத்தி பயணிகள் இறக்கி செல்ல சாலையோரம் இடம் ஒதுக்க வேண்டும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ