உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி வழியாக வயநாடு சென்ற பிரியங்கா; காங்., கட்சியினர் வரவேற்பு காங்., கட்சியினர் வரவேற்பு

நீலகிரி வழியாக வயநாடு சென்ற பிரியங்கா; காங்., கட்சியினர் வரவேற்பு காங்., கட்சியினர் வரவேற்பு

பந்தலுார்: நீலகிரி மாவட்டம் வழியாக வயநாடு சென்ற காங்., பொதுச் செயலாளர் பிரியங்காவுக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.கேரள மாநிலம் வயநாடு பார்லிமென்ட் தொகுதிக்கு நவ.,13ஆம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது.அதில், காங்., கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று பிரியங்கா மைசூரு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தமிழகத்தின் எல்லை பகுதியான, நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே தாளூரில் செயல்படும் தனியார் கல்லுாரி மைதானத்தில் இறங்கினார்.அங்கு, கேரளாவின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, எம்.பி., குரியாகோஸ், எம்.எல்.ஏ.,க்கள் சித்திக், பாலகிருஷ்ணன், அனில்குமார், வயநாடு மாவட்ட தலைவர் அப்பச்சன், நீலகிரி மாவட்ட தலைவர், எம்.எல்.ஏ., கணேசன் முன்னிலையில், கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து, கல்லுாரி மாணவர்களை சந்தித்த பிரியங்கா, 'செல்பி' எடுத்துக்கொண்டார். இவர் வருகையால், மத்திய பாதுகாப்புபடை, சி.ஆர்.பி.எப்., மத்திய உளவுத்துறை, தமிழக, கேரளா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை