குடிநீர் வால்வு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சிக்கல்
குன்னுார்,; குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட உமரி காட்டேஜ் அருகே, குடிநீர் வினியோக வால்வு பகுதியில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு உமரி காட்டேஜ் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் ஸ்லாப் உடைந்து, மழைநீருடன் கழிவு நீரும் வெளியேறியது. இந்த கழிவு நீர் அருகில் உள்ள குடிநீர் வினியோக வால்வு பகுதி முழுவதும் தேங்கி குடிநீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்து பெயரளவிற்கு ஆய்வு செய்யப்பட்டது. எனினும் நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.