உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட கற்களால் சிக்கல்

குடிநீர் சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட கற்களால் சிக்கல்

குன்னுார்; குன்னுார் பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட 'இன்டர்லாக்' கற்களை, சரியாக மூடாமல் உள்ளதால் குழி ஏற்பட்டு பயணிகள் விழும் அபாயம் உள்ளது. குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கடந்த, 9ம் தேதி குடிநீர் சீரமைப்பு பணிகளுக்காக, நகராட்சி சார்பில் 'இன்டர்லாக்' கற்கள் அகற்றப்பட்டு, குழி தோண்டி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதியில் பணிகள் முடிந்த பிறகு, அகற்றப்பட்ட இன்டர்லாக் கற்கள் சரியாக மூடாமல் பெயரளவுக்கு வைத்து சென்றுள்ளனர். இதனால், இவ்வழியாக நடந்து செல்லும் பயணிகள் தவறி விழுந்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை