| ADDED : செப் 06, 2026 07:11 PM
பந்தலூர்: பந்தலூர் பள்ளிவாசல் சார்பில் நபி தின ஊர்வலம் நடந்தது. விழா குழு நிர்வாகி சக்கீர் தலைமை வகித்தார். பள்ளிவாசலில் துவங்கிய ஊர்வலத்தில், நபிகள் குறித்த பாடல்கள் இடம்பெற்றது. நிகழ்ச்சியில், சிறுவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. ஊர்வலம், பந்தலூர் பஜார், இந்திரா நகர், தாசில்தார் அலுவலக சாலை வழியாக, பள்ளிவாசலை வந்தடைந்தது. பந்தலூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் அஷ்ரப், நிர்வாகி செல்வகுமார் தலைமையில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதே போல், த.வெ.க. சார்பில் மாவட்ட வழக்கீல்கள் பிரிவு நிர்வாகி மோகன்ராஜ் தலைமையில், அனைவருக்கும் ஜூஸ் வழங்கப்பட்டது. அனைத்து பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகி சித்திக், நாசர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.