உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறைக்கு கண்டனம் மசினகுடியில் ஆர்ப்பாட்டம்

வனத்துறைக்கு கண்டனம் மசினகுடியில் ஆர்ப்பாட்டம்

கூடலுார்: மசினகுடி பகுதியில், வனத்துறை கட்டுப்பாட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் மொய்தீன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயசீலன் பங்கேற்று பேசியதாவது: மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு, கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை தடைவிதித்து, கெடுபிடிகள் செய்வதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், வாகனங்கள் நிறுத்தி சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல உரிய இடத்தை ஒதுக்காமல், அலைக்கழிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அமைந்துள்ளது. மாயார், பூதநத்தம் பகுதியில் விவசாய நிலத்திற்கு நீர் வழங்கும் திட்டத்திற்காக, 68 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், எம்.எல்.ஏ., நிதியில் செம்மநத்தம் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேற்ற வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமமூர்த்தி, முஜீப் ரகுமான், அப்பாஸ், விக்கி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை