உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை ஊராட்சி அலுவலக தரையில் அமர்ந்து போராட்டம்

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை ஊராட்சி அலுவலக தரையில் அமர்ந்து போராட்டம்

பந்தலுார்,; பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதுகாரை கொல்லி கிராமம் அமைந்துள்ளது. இங்கு டான்டீயில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் உட்பட 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை, மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஊராட்சி மூலம் முறையான குடிநீர் திட்டம் செயல்படுத்தாத நிலையில், பாதிக்கப்பட்ட கிராமத்து மக்கள் தங்கள் சொந்த செலவில், அருகில் உள்ள பழமையான கிணற்றில் குடிநீர் குழாய் அமைத்து, தொட்டியில் நிரப்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தனிநபர் ஒருவருக்கு நேரடியாக, ஊராட்சி மூலம் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.இதனால், தொட்டியில் நிரம்பும் தண்ணீர் முழுவதும் தனிநபருக்கு சென்று விடுவதால், மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் கூறியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதை தொடர்ந்து, கிராம மக்கள் நேற்று ஊராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அதன்பின், ' தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி, தடுப்பு சுவர், கழிவுநீர் கால்வாய் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்; அரசு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளது குறித்து நில அளவை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிநபருக்கு இணைப்பு வழங்கி கூடாது,' என, வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். கூடலுார் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில், ''இந்த பகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. தனிநபரும் ஊராட்சிக்கு வரி செலுத்தும் நிலையில், அவருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை கிராம மக்கள் அரசியலாக மாற்றி போராடுவதை ஏற்று கொள்ள முடியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை