| ADDED : ஜன 31, 2024 10:21 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பிஜூ ஜோஸ் வரவேற்றார். தாளாளர் பாதர் ஜோர்ஜ் தலைமை வகித்து பேசுகையில் ''விலையில்லா சைக்கிள் வாங்கும் மாணவர்கள் அதனை வீணாக வீட்டில் நிறுத்தாமல் உடல் பயிற்சிக்கும், பள்ளிக்கும் பயன்படுத்தவேண்டும்,'' என்றார்முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சைக்கிள் வழங்கி பேசுகையில், ''பள்ளி மாணவர்கள் தற்போது பெருகி வரும், ஆன்லைன் மோகத்தில், பொழுதை வீணாக்க கூடாது. சைக்கிள்கள் தினசரி ஓட்டுவதன் மூலம், உடற்பயிற்சியாக மாறி, சுறு, சுறுப்பாக இருக்க உதவும். சைக்கிள் ஓட்டி செல்வதுடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும்,'' என்றார்.முன்னாள் தலைமை ஆசிரியர் மத்தாய் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் சைஜூ நன்றி கூறினார்.