துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ஊட்டி: ஊட்டியில் பா.ஜ., சார்பில்,150 துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஊட்டி காந்தள் பகுதியில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பா.ஜ., எஸ்.சி., அணி சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜ் பங்கேற்று, 150 க்கு மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், காலணிகள், பூட்ஸ், முகக்கவசம், மழைக்கோட்டு உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., எஸ்.சி., அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.