உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை ஆக்ரோஷம் : அச்சத்தில் பொதுமக்கள்

காட்டு யானை ஆக்ரோஷம் : அச்சத்தில் பொதுமக்கள்

கூடலூர்: கூடலூர், தேவர்சோலையில் நுழைந்த காட்டு யானை, காரை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து, விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. யானை தாக்கி பலர் உயி ரிழந்துள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர். காட்டு யானைகள் பகல் நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், நிரந்தரமான தீர்வு இல்லை. தேவர்சோலை அருகே, திரி டிவிஷன் பகுதியில் நேற்று, காலை 8:30 மணிக்கு நுழைந்த காட்டு யானையை பார்த்து மக்கள் அலறியடித்து ஓடினர். யானை சாலையோரம் நிறுத்தியிருந்த முகமது முஸ்தபா என்பவரின் காரை சேதப்படுத்தியது. மக்கள் சத்தமிட்டு யானையை விரட்டினர். சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சிலர், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ