மேலும் செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் முத்து பல்லக்கு திருவிழா
14-Apr-2025
குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நகராட்சி சார்பில் நடந்த புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்தி கடன் செலுத்தினர்.குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழாவில், நேற்று நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் இருந்து, பால்குட ஊர்வலம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலம் நடந்தது.அதில், நகராட்சி ஊழியர் ரங்கராஜ், முதுகில் அலகு குத்தி, அதில் இளநீர் காய்களை இழுத்தும், தீச்சட்டிகளை சுமந்து வந்தார். மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து அன்னதானம். இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை நடந்தன. ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் செய்தனர்.
14-Apr-2025