உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூவர்ண விளக்குகளில் ஒளிரும் ரயில் நிலையங்கள்

மூவர்ண விளக்குகளில் ஒளிரும் ரயில் நிலையங்கள்

குன்னுார் ; 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் ராணுவ வீரர்களை போற்றும் வகையில், குன்னுார் ஊட்டி மலை ரயில் நிலையங்களில், தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகள், ஒளிர விடப்பட்டுள்ளனகாஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில்,நமது ராணுவத்தின் துல்லிய தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யப்பட்டது. 'ஆப்பரேஷன் சிந்துாரில்' ராணுவ வீரர்களின் அபார துணிச்சல் மற்றும் வீரத்தை போற்றும் வகையில், தேசிய கொடியின் மூவர்ண விளக்குகள் அலங்காரத்தால், ஊட்டி, குன்னுார், ஈரோடு, சேலம், கோவை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்கள் ஒளிர விடப்பட்டுள்ளது,' என தென்னக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வெகுவாக ரசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை