உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய கடைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

புதிய கடைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

குன்னூர்: குன்னூரில் கனமழையால் உழவர் சந்தை அருகே, புதிதாக அமைக்கப்பட்ட கடைகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் மார்க்கெட் கடைகளை இடித்து கட்ட நகராட்சி முடிவு செய்தது. இங்குள்ள வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் உழவர் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டது. ஏற்கனவே இங்கு அளவீடு குறைவு, மக்கள் வந்து செல்வதில் பாதிப்பு, நீராதார பகுதி என பல்வேறு புகார்களை வியாபாரிகள் தெரிவித்த போதும், இதே இடத்தில் கடைகள் கட்டப்பட்டன. தற்போது நாளுக்கு நாள் மழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்காலிக கடைகள் முன்பு சேறும் சகதியுடன் மழை நீர் தேங்கி நிற்கிறது. சில கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், ஓரிரு நாட்களில் பெய்த மழையிலேயே பெரிய பாதிப்புகள் ஏற்படுகிறது. ஏற்கனவே வனவிலங்குகள் நடமாட்டம், நிலச்சரிவு பாதிப்பு, மக்கள் சென்று வருவதில் உள்ள சிரமம் குறித்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு பாதிப்பு அபாயம் அதிகம் உள்ளது, என்றனர். நகராட்சி கமிஷனர் சரவணன் (பொ) கூறுகையில், மழை பாதிப்புகள் அதிகமாக உள்ளது. மற்ற இடங்களைப் போல இங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் சீரமைக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !