உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கணக்கெடுப்பில் தென்பட்ட அரியவகை பறவைகள்

 கணக்கெடுப்பில் தென்பட்ட அரியவகை பறவைகள்

பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பின்போது பலவகை பறவைகள் தென்பட்டன. முதுமலை புலிகள் காப்ப கம் மற்றும் கூடலுார் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நீர்வாழ் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்தில், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில், வனச்சரகர் ரவி, வனவர் சுதீர்குமார் தலைமையில் இரண்டு வன குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். காலை, 6:00 மணிக்கு துவங்கிய கணக்கெடுப்பு பணியில், சிறிய குளங்கள் மற்றும் ஆற்றங்கரை ஈரமான பகுதிகளில் வாழும், 'வெள்ளை புருவ வாக்டெயில், சிவப்பு மீசை புல்புல், உளருவாய் குருவி, மலபார் கிளி,' உள்ளிட்ட பல்வேறு, பறவைகள், பனித்துளிகளுக்கு மத்தியில் தென்பட்டன. அதில், 'பறவைகளின் இனங்கள், அவை வாழும் சதுப்பு நிலங்களின் தன்மை, நீரோடைகள் மற்றும் குளங்கள், விவசாய நிலமா அல்லது வனமாக உள்ளதா,' என்பது குறித்த விவரங்களும் பதிவு செய்யப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'இதுபோன்ற பறவை இனங்களை பாதுகாக்க, விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதை முற்றிலுமாக தவிர்ப்பதுடன், கோடை காலங்களில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ