உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்

 வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அரசு அலுவலர்களுடனான வளமிகு வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த உயர் அலுவலர் சத்யா, கோத்தகிரி வட்டாரத்தில் வளமிகு வட்டாரத்தின் உடைய முக்கிய குறியீடுகள் மாநில மற்றும் தேசிய அளவில் ஒப்பீடு செய்து, அதன் வளர்ச்சி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, கோத்தகிரி வட்டாரத்தில் இயங்கும் ரேஷன் கடைகள் மூலம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், மதிய உணவுத் திட்டம், மகளிர் குழு மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, பணிகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதில், கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை