உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் குவிந்த குப்பைகள் அகற்றம்

சாலையோரம் குவிந்த குப்பைகள் அகற்றம்

கூடலுார்: மேல்கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் குவிந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி சீரமைத்தனர்.கூடலுார் பகுதியில், திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதை நகராட்சி தடை செய்துள்ளது. எனினும், சில பகுதிகளில் தொடர்ந்து திறந்த வெளியில் பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், மேல்கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம், திறந்த வெளியில் குப்பைகள் குவிந்து கிடந்தது. அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், மழைநீர் வழிந்தோட தடையும் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.தொடர்ந்து, கூடலுார் நகராட்சி கமிஷனர் சுவீதாஸ்ரீ உத்தரவுப்படி, நகராட்சி ஊழியர்கள், சாலையோரம் குவிந்த குப்பைகளை அகற்றி சீரமைத்தனர். மேலும், அப்பகுதி மக்களிடம் குப்பைகளை தெரு ஓரங்கள், திறந்த வெளிகளில் கொட்டுவதை தவிர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை