உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி நெடுஞ்சாலையில் இடையூறு சீகை மரங்களை அகற்றும் பணி ஜரூர்

கோத்தகிரி நெடுஞ்சாலையில் இடையூறு சீகை மரங்களை அகற்றும் பணி ஜரூர்

கோத்தகிரி: கோத்தகிரி - கட்டபெட்டு இடையே சாலை ஓரத்தில் இடையூறாக இருந்த சீகை மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.கோத்தகிரியில் இருந்து குன்னுார், ஊட்டி உட்பட, கிராமப்புறங்களுக்கு அதிகளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, பள்ளி வாகனங்கள் உட்பட, தனியார் வாகனங்களின் இயக்கமும் அதிகமாக உள்ளது. சாலை சீரமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கார்சலி-கிருஷ்ணாபுதுார் இடையே சாலை ஓரத்தில், பெரிய சீகை மரங்கள் சாய்ந்து காணப்பட்டன.மேலும், மழை நாட்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கும் என்பதால், மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், இப்பகுதியில் இருந்த சீகை மரங்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. 'டிரைவர்கள் கூறுகையில், 'இப்பணியை, கட்டபெட்டு பகுதியில் இருந்து, பெட்டட்டி வரையிலும் மேற்கொள்ள வேண்டும். மழை காலத்துக்குள் இந்த பணிகளை முடித்தால் வாகனங்கள் இயக்க சிரமம் இருக்காது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை