உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கம்மாத்தி குங்கூர்மூலா சாலை ரூ.2.3 கோடியில் சீரமைப்பு

கம்மாத்தி குங்கூர்மூலா சாலை ரூ.2.3 கோடியில் சீரமைப்பு

கூடலுார்: கூடலுார் ஸ்ரீமதுரை அருகே, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்ட நிதி, 2.3 கோடி ரூபாய் செலவில் கம்மாத்தி -குங்கூர்மூலா சாலை, சீரமைப்பு பணி துவங்கப்பட்டது.கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சியில் சேதமடைந்த கம்மாத்தி -குங்கூர்மூலா சாலையில் சீரமைக்க மக்கள் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, இச்சாலையை சீரமைக்க, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று பூமி பூஜையுடன் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில், துணை தலைவர் ரெஜி மேத்யூ, கவுன்சிலர் பீனா ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளர் சோனி, பொதுமக்கள் பங்கேற்றனர். மக்கள் கூறுகையில், ' மத்திய அரசின் திட்டத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்தில் சாலை சீரமைப்பு பணி துவங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த பணியை தரமுடன் மேற்கொள்ள வேண்டும். மழை காலம் தீவிரமடைவதற்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை