வருவாய் துறை சோதனை ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
ஊட்டி, ; ஊட்டி நகரில் நடந்த தடை பிளாஸ்டிக் ரெய்டில், 20 கடைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உட்பட, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த, 2019 ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால், சமீப காலமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. சமீபத்தில் சென்னை ஐ கோர்ட் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுக்கு கண்டனம் தெரிவித்தது. இதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு துறை அலுவலர்களை ஒன்றிணைத்து ஆலோசனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுத்தனர்.அதன்படி, ஊட்டி நகரில் ஆர்.டி. ஓ., சதீஷ்குமார் தலைமையில், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் சோதனை மேற்கொண்டனர். அதில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.