உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்த சாலையில் வாகன விபத்து அபாயம்

சேதமடைந்த சாலையில் வாகன விபத்து அபாயம்

கூடலுார்; கூடலுார் கோழிப்பாலம் அருகே, சேதமடைந்த சாலையோரத்தை, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலுார் கோழிக்கோடு சாலை, உள்ளூர் மட்டுமின்றி, கேரளா-கர்நாடக இடையே வாகன போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. இச்சாலை, கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், தமிழக -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரை, பல இடங்களில் சேதமடைந்துள்ளது. அப்பகுதிகளை நெடுஞ்சாலை துறையினர், நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோழிப்பாலம் அருகே, சாலையோர மண் அரிப்பு காரணமாக, சாலை சேதமடைந்ததுள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததாலும், அதிக பாரம் ஏற்றி செல்லும் கனக வாகனங்களால், சாலை மேலும்,சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதனால், அதிருப்தி அடைந்துள்ளனர். ஓட்டுனர்கள் கூறுகையில்,'சேதமடைந்த சாலையோரம் சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், சாலை மேலும், சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி